ETV Bharat / city

அம்மா மினி கிளினிக் மூடல்! - 1950 மினி கிளினிக்

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட அம்மா மினிகிளினிக் மூடப்பட்டதால், அங்கு மருத்துவர்களுக்கும் கரோனா, ஒமைக்ரான் ஒழிப்புப் பணியில் மார்ச் மாதம் வரை பணிபுரிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அம்மா மினிகிளினிக் மூடல்
அம்மா மினிகிளினிக்
author img

By

Published : Jan 4, 2022, 1:56 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யவும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் அம்மா மினிகிளினிக் தொடங்கப்பட்டது.

அப்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்தனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பைக் குறைப்பதற்காக 2000 மினிகிளினிக் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், 1950 மினி கிளினிக் மட்டுமே தொடங்கப்பட்டன.

மேலும், இந்த மினிகிளினிக்கில் பணியாற்ற, முதலில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆள்கள் தேர்வுச் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்களை நியமனம் செய்தனர். இவர்கள் பணிநிரந்தரம் கேட்கக் கூடாது, எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், ”அம்மா மினிகிளினிக் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டை அடைய முடியவில்லை.

அதனைவிட மக்களைத் தேடி மருத்துவம், வரும் முன்காப்போம் திட்டத்தின் மூலம் சுகாதாரத்திட்டத்தில் ஒருங்கிணைந்து சுகாதாரம் மேம்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் அம்மா மினிகிளினிக் திட்டத்தை 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் மூடப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள், செவலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்களை மார்ச் 31ஆம் தேதி வரையில் தேசிய சுகதாரதத்திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கான ஊதியத்தை தேசிய சுகாதாரத்திட்டத்தில் இருந்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: Pongal Gift Hamper: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.