ETV Bharat / city

தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஆபத்து குறைவு- ராதாகிருஷ்ணன் - தடுப்பூசி

சிறப்பு தடுப்பூசி முகாமை திறன்பட செய்ததற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Nov 25, 2021, 7:39 PM IST

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் ”2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இறப்பு குறித்து பெறப்பட்ட புள்ளி விபரங்களின்படி மொத்தம் 2011 நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் ஐந்து விழுக்காட்டினர். இவர்கள் தாமதமான சிகிச்சை, இணை நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 95 விழுக்காட்டினர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது ஒற்றை டோஸ் செலுத்தியவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி அவசியம்

மேலும், 95 விழுக்காட்டில் சுமார் 84 விழுக்காடு (1675 நபர்கள்) தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். மீதமுள்ள 11 விழுக்காட்டினர் (227 நபர்கள்) இரண்டாவது டோஸ் எடுக்காதவர்கள்.

தமிழ்நாட்டின் தரவுகளின்படி, தடுப்பூசி போடப்பட்ட நபருடன் ஒப்பிடும்போது கரோனா காரணமாக தடுப்பூசி போடப்படாத நபர் இறப்பதற்கான ஆபத்து 3.5 மடங்கு அதிகம். மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு புள்ளி விவரங்கள், மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், “கரோனா வைரஸ் தொற்று ஈரோடு, நாமக்கல், சேலம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோய் பாதிப்பு தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூர். திருப்பூரில் கரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

திருநெல்வேலி, திருச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்களில் கவனமாக இருக்க வேண்டும். கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அடிக்கடி பயணம் செய்யும் நபர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கோரிக்கை

பொதுமக்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவதுடன் கரோனா பாதுகாப்பு வழிமுறையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. எனவே பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்யப்படுபவர்களில் நாளொன்றுக்கு 800 நபர்களுக்கு குறைவாக பாதிப்பு இருந்து வருகிறது. சோதனை செய்யப்பட்டவர்களில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே பாதிப்பு இருந்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.