ETV Bharat / city

கின்னஸ் சாதனை முயற்சியைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்!

சென்னை: நெகிழி விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ்  சாதனை முயற்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

plastic awareness program in chennai secretariat
author img

By

Published : Nov 14, 2019, 1:52 PM IST

Updated : Nov 14, 2019, 2:11 PM IST

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் 'பிளாஸ்டிக்' எனப்படும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் நெகிழிப் பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

அதனடிப்படையில், 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மைதானங்களில் ஒன்று சேர்ந்து 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் நெகிழி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் செந்தில்வேலன் கூறுகையில், "நெகிழிப் பொருள்கள் மண்ணுக்குள் போவதால் மழைநீரைச் சேமிக்க முடியாமல் போகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுப் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம்.

கின்னஸ் சாதனை முயற்சியைத் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்

9ஆம் வகுப்பு பள்ளி பாடத்திலும் நெகிழி ஒழிப்பு குறித்து பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வைப் பெறுவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ’நெகிழியைப் பயன்படுத்தி வருங்கால சந்ததிகளையும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்

Intro:Body: சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக்கை தவிர்க்கும் நோக்கில் "நெகிழி மாசில்லா தமிழ்நாடு" என்ற தலைப்பில் 10லட்சம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சின்னஸ் சாதனை முயற்சியை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மூத்த அமைச்சர்கள், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். மேலும் சென்னையை சேர்ந்த 800 பள்ளி மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நெகிழியில்லா தமிழகம் என்ற பெயரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் கின்னஸ் உலக சாதனை முயற்சி நடந்தது. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மைதானங்களில் ஒன்று சேர்ந்து "நெகிழி மாசில்லா தமிழ்நாடு" என்ற தலைப்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதுகுறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் செந்தில்வேலன் பேசுகையில்,

பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணுக்குள் போய் மழைநீரை சேமிக்க முடியாமல் தன்னர் பஞ்சம் ஏற்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானோம். இதை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிளாஸ்டிக் தவிர்க்க பள்ளி வகுப்பறை, நோட்டீஸ் போர்டு ஆகியவற்றில் பிளாஸ்டிக் தவிர்க்க எழுதி வைக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு பள்ளி பாட திட்டத்திலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சேர்க்கப்பட்டுள்ளது, இதன்மூலம் மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு பெறுவார்கள் என்றும் என்று பேசினார்.
Conclusion:
Last Updated : Nov 14, 2019, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.