ETV Bharat / city

காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு; பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியல்!

தமிழ்நாட்டில் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியல் வெளியீடு

author img

By

Published : May 7, 2022, 12:29 PM IST

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை வெளியிட்ட புதிய பட்டியலில், பொதுச் செயலாளராக இருந்த கரு.நாகராஜனுக்கு துணைத்தலைவர் பதவி மாற்றி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், கே.பி. ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோரும் மாநிலத் துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக எம்.முருகானந்தம், ஏ.பி.முருகானந்தம், சீனிவாசன், கார்த்தியாயினி உள்ளிட்டோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கலாசார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊடக பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரங்கநாயகலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து வினோஜ் பி. செல்வம் நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் புதிய தலைவராக ரமேஷ் சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்த வினோஜ் பி.செல்வத்திற்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகளிரணி தலைவராக உமாரதி, பட்டியலின (எஸ்.சி) அணி தலைவராக தடா. பெரியசாமி, பழங்குடி (எஸ்.டி) அணி தலைவராக சிவப்பிரகாசம், சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரண், ஓ.பி.சி அணி தலைவராக சாய் சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாத்தூர் கல்லூரி பேருந்து விபத்து - காயம் அடைந்த மாணவிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.