சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவும், சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் தொடங்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததோடு, சட்டமும் இயற்றப்பட்டது.
இதனை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு ஆதி திராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்திற்கு, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்ட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவகுமார், சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பின் அவசரகால மருந்துகள் பட்டியலில் கோவாக்சின்? அடுத்த வாரம் முடிவு!