ETV Bharat / city

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை! - 2 ஆண்டுகள் சிறை தண்டனை

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த விவகாரத்தில், உயர்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

swindling job racket case
swindling job racket case
author img

By

Published : Oct 31, 2021, 7:46 AM IST

சென்னை: பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த ஸ்ரீராமன் என்பவருடன், கிருஷ்ணகிரி மாவட்டம், தோப்பூரில் உள்ள அரசு உயர் நிலை ஆசிரியர் பி.ஆதிமணி என்பவர் சேர்ந்து கடந்த 2013, 2014ஆம் ஆண்டுகளில் ரயில்வேயில் பொது மேலாளர், கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோர் ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து 26 நபர்களிடம் 37 லட்ச ரூபாய் வரை பெற்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருவரும் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வந்த புகாரில் விசாரணை நடத்திய சிபிஐ காவல் துறையினர் ஐசிஎஃப் ஸ்ரீராமன், ஆசிரியர் ஆதிமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐசிஎஃப் ஸ்ரீராமன் தலைமறைவானதைத் தொடர்ந்து ஆசிரியர் ஆதிமணி மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது நிரூபணம் ஆனதாகக் கூறி ஆசிரியர் ஆதிமணிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.