டெல்லி: கடந்த 2011 -15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர், சமரசம் செய்யப்பட்டதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மனு தாக்கல் செய்த நிலையில், செந்தில் பாலாஜி மீது இருந்த குற்ற வழக்கை கடந்தாண்டு ஜூலை 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் தங்களின் புகார்களையும் வாபஸ் பெற்றனர்.
செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சேலத்தைச்சேர்ந்த தர்மராஜ் என்பவர் மேல் முறையீட்டு மனுவாகத் தாக்கல் செய்தார். இந்த மனுவை, அப்போதைய உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. வழக்கு விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய அமலாக்கப்பிரிவின் சம்மன் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு