துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர் பேசியது பச்சை பொய் என்றும், இந்த பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ’ நான் பத்திரிகையில் பார்த்தைத்தான் சொன்னேன். பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. இது மறுக்கக்கூடிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம்’ என்று பஞ்ச் டயலாக் அடித்தார்.
அவரது இந்த பஞ்ச் எரியும் தீயில் மேற்கொண்டு பஞ்சை போட்டது போல் ஆகிவிட்டது. இந்நிலையில், ரஜினியின் இந்த பஞ்ச்சை அடுத்து #சூப்பர்சங்கிரஜினி என ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.