சென்னை: சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் 1987 பேட்ச் பிரிவு ஐஆர்எஸ் அலுவலர் ஆவார். இவர், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக மும்பை, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரூ உள்ளிட்ட வருமான வரித்துறை அலுவலகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன்.
தற்போது இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றைப் பெற்று இப்பதவிக்கு வந்துள்ளார். இதற்கு முன்பு வருமான வரித் துறை முதன்மை ஆணையராக ராஜீவ் ஜெயின் பொறுப்பு வகித்து வந்தார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை