இது குறித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”ஊரடங்காக இருப்பதால் நடப்புக் கல்வியாண்டில் நடத்தி முடித்திருக்கவேண்டிய பாடங்களையும், பருவத் தேர்வுகளையும் இணையதளம் மூலம் நடத்திக்கொள்ள பல்கலைக்கழகங்களே பரிசீலித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டியுள்ளது.
இணையவழி கற்றல், கற்பித்தல் முறை, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பொருந்தும் வகையில் இருக்காது. ஊரடங்கால் பெற்றோர் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்குமே ஒவ்வொரு நாளும் பெரும் போராட்டமாக இருந்து வருகிறது.
ஒருபுறம் கரோனாவும், மறுபுறம் வறுமையும் ஒன்று சேர்ந்து அச்சுறுத்தி வருவதால், பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலை மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்த சூழலில், இணையவழி கற்றல் கற்பித்தல் முறை என்பது சாத்தியமற்றதும், சமமற்றதாகவுமே அமையும்.
எனவே இந்த நெருக்கடியான நிலையில் பெற்றோர், மாணவர்கள் மன நிலையை அறிந்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் யோசனையை கைவிட்டு கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபின், கல்வியாண்டை வேகமாக நிறைவு செய்து, பருவத்தேர்வுகளை நடத்த திட்டமிட வேண்டும் ” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரு.வி.க. நகர், அடையாரில் ஆய்வுசெய்த சிறப்பு அலுவலர் ராதா கிருஷ்ணன்