ETV Bharat / city

ஆசிரியரின் தண்டனையால் உயிரிழந்த மாணவன்! - இழப்பீடு வழங்க உத்தரவு! - பள்ளி மாணவன் மரணம்

சென்னை: பள்ளிக்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக வாத்து நடை போடச் செய்ததால் மாணவன் உயிரிழந்தது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court
high court
author img

By

Published : Mar 5, 2021, 6:23 PM IST

சென்னை திரு.வி.க நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முரளி என்பவரின் மகன், தாமதமாக வந்ததால் பள்ளி மைதானத்தை சுற்றி வாத்து நடை போடும் படி தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி வாத்து நடை மேற்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, மாணவனின் தந்தை முரளி அளித்த புகாரின் அடிப்படையில், திரு.வி.க நகர் காவல்துறையினர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய் சிங், தலைமை ஆசிரியர் அருள், தாளாளர் ஜோசப் ஃபெர்னாண்டஸ் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்து அம்மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மகனைப் பறிகொடுத்த தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மூவரும் சேர்ந்து 10 லட்ச ரூபாயை வழங்குவதாக கூறியதையடுத்து, பள்ளி உடற்கல்வி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் தாளாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், உடற்பயிற்சியில் அறிவியல் பூர்வமான வளர்ச்சிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: நவீன எண்டோஸ்கோபி மூலம் உணவுக்குழாய் அடைப்பை நீக்கிய மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.