தமிழ்நாடு மகளிர் மாநில ஆணையம் மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், எஸ். குமாரி தலைவராகவும், உறுப்பினர்களாக டாக்டர் மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், ராணி ஆகியோருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, வரலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மகளிர் ஆணையத்தில் நியமிக்கப்பட்டவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பொறுப்பில் நீடிப்பார்கள். கடந்த 1993ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பெண்களுக்குச் சமத்துவம் பெற்றுத் தருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்யத் தடை