சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸின் மனைவி ஜெசிந்தா நேற்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த வந்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நகரில் உள்ள பீட்டர் அல்போன்ஸ் வீட்டில் மறைந்த ஜெசிந்தாவின் உடலுக்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து இன்று (மே 5) அஞ்சலி செலுத்தினார்.