ETV Bharat / city

தென் சென்னை தொகுதி ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறையை ஏற்படுத்தித் தர வேண்டும் - எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்

சென்னை: தென்னக ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில், தென் சென்னை தொகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறையை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்ததாக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன்
author img

By

Published : Sep 9, 2019, 5:44 PM IST

சென்னை சென்ட்ரலில் தென்னக இரயில்வே பொது மேலாளர் உடனான எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் பங்கேற்று தங்களது தொகுதியில் இருக்கும் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், “என் தொகுதியில் உள்ள ரயில்வே நிலையங்களில் இருக்கும் குறைகள் குறித்து கூட்டத்தில் பேசினேன். அதில் மயிலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய கோரியுள்ளேன். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்வதில்லை என்று மக்கள் என்னிடம் கூறிய குற்றச்சாட்டை கோரிக்கையாக வைத்துள்ளேன். மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே மூன்று டாஸ்மாக் கடைகள் இருப்பதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி

தமிழ்நாடு அரசிடம் கூறி அந்த மூன்று டாஸ்மாக் கடைகளையும் நீக்க வழிவகை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன். என் தொகுதியைச் சுற்றிய ரயில் நிலையங்களில் எங்குமே தாய்மார்கள் பாலூட்டும் அறை இல்லை, எனவே உடனடியாக அறைகளை கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளேன்.

குறிப்பாக, ரயில்வே துறையில் நடக்கும் போட்டித் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளிலும் எழுத நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள வெற்றிடங்களை பூங்காவாக மாற்ற வேண்டும், டிக்கட் கவுன்ட்டர் மேல்புறமாக இருப்பதால் முதியோர்களுக்கு டிக்கெட் எடுப்பதில் பாதிப்பு உள்ளது எனவே அதனை கீழ் தளத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். மேலும், தமிழ்நாட்டின் பல இடங்களில் பயணிகளுக்கு உள்ள குறைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்” என்றார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.09.19

சென்னை சென்ரலில் தென்னக இரயில்வே பொது மேலாளர் உடனான எம்.பி க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்
எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி..

மைலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய கோரியுள்ளோம். சைதாப்பேட்டை நிலையத்யில் ரயில் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு வைத்துள்ளேன். மைலாப்பூர் ரயில் நிலையம் அருகே மூன்று டாஸ்மாக் கடை இருப்பதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் நடக்கும் போட்டித் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளிலும் எழுத நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள வெற்றிடங்களை பூங்காவாக மாற்ற வேண்டும். டிக்கட் கவுண்டர் மேல்புறமாக இருப்பதால் பாதிப்பு உள்ளதால், கீழ் தளத்தில் வைக்கப்பட வேண்டும் என கோரியுள்ளோம்.. பொதுவாக அனைவரும் வைத்த கோரிக்கையக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சுத்தத்தை கடைபிடித்து பொதுமக்களுக்கு உதவுதல் உள்ளிட்டவை சரி செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பயணிகளுக்கு உள்ள குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என கோரியுள்ளோம் என்றார்..

tn_che_02_southern_railway_meeting_tamilachi_byte_script_7204894
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.