ETV Bharat / city

'இயற்கை அழகை ரசிக்க மலை ரயில்களில் கண்ணாடிப் பெட்டிகள்!' - mountain train news

மதுரை: மலை ரயில்களில் இயற்கை அழகை ரசிக்க கண்ணாடிப் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தென்னக ரயில்வே பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மலை ரயில்களில் இயற்கை அழகை ரசிக்க கண்ணாடிப் பெட்டிகள் -தென்னக ரயில்வே பொது மேலாளர் தகவல்

author img

By

Published : Feb 6, 2021, 11:44 AM IST

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் காணொலி காட்சி வாயிலாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரும் நிதியாண்டில் தென்னக ரயில்வேக்கு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.3,855 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்காக ரூ.1206.04 கோடியும், அகல ரயில் பாதை பணிகளுக்காக ரூ.178 கோடியும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே எல்லைக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்த ரூ.224.57 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு ஒதுக்கிய நிதியைக் காட்டிலும் 35 விழுக்காடு அதிகமாகும்.

ரயில் நிலையத்தில் நடை மேம்பாலங்கள் அமைக்கவும், நடைமேடைகள் தரம் உயர்த்தவும் ரூ.87.52 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கான மற்ற வசதிகளை உருவாக்கிட ரூ.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ரயில் திட்டம் 2024இன்படி ரயில்வே கட்டமைப்பு, புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்தப் பணிகள் 2030ஆம் ஆண்டில் நிறைவடையும். அவை 2050ஆம் ஆண்டு வரையிலான தேவைகளை நிறைவுசெய்வதாக அமையும்.

தமிழ்நாட்டில் 27 புதிய ரயில் திட்டங்கள் ரூ.30,961 கோடி மதிப்பில் நடைபெற்றுவருகிறது. அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.20 கோடியும், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதைத் திட்டத்திற்கு ரூ.75 கோடியும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சி - நாகர்கோயில், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு முறையே ரூபாய் 200, 300 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ரூ.8799 கோடி மதிப்பில் 9 புதிய திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தெற்கு ரயில்வே எல்லை முழுவதும் ரயில் பாதைகள் மின்மயமாக்கல் பணிகள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடையும். சமிக்ஞை (சிக்னல்), தொலைத்தொடர்பு பணிகளுக்காக ரூ.146 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இயற்கை எழில் நிறைந்த மலைப்பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் இயற்கை அழகினை ரசித்திட கண்ணாடி வேய்ந்த கூரையுடன்கூடிய ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.