சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, சோமாலிய குடியரசின் துணைத் தலைவர் அப்திரஹ்மான் சைலிசி சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள கல்வி முறைகள் பற்றியும், அவற்றை செயல்படுத்தும் முறைகளையும் கேட்டறிந்தார்.
அதன்பின்னர், தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறையும், பள்ளிகளும் சிறப்பாக செயல்படுவதாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி முறையை தங்கள் நாட்டில் செயல்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.இந்நிகழ்வில் பொருளாதாரம் மற்றும் வணிக துறைக்கான இந்தியாவின் சிறப்பு ஆலோசகர் கே. அப்துல் கனி, துணை ஜனாதிபதியின் சமூக விவகாரங்கள் மற்றும் சுகாதாரத்திற்கான ஆலோசகர் ஜக்காரியா மற்றும் சென்னை தீபம் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அண்ணாமலை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:'கண்ணொளி காப்போம்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்