ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் பயணியை கடத்திய ஆறு பேருக்கு சிறை

சென்னை: விமான நிலையத்தில் பயணியை கடத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Six arrested for kidnapping passenger
author img

By

Published : Nov 19, 2019, 3:30 AM IST

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தணிகைவேல் என்பவரிடம், அடையாளம் தெரியாத ஒருவர் 22 சவரன் நகைகளை கொடுத்து, இதை தனது உறவினர்கள் சென்னையில் பெற்றுக்கொள்வர் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சென்னை வந்தவுடன் அடையாளம் தெரியாத நபரின் உறவினர்கள், தணிக்கைவேலிடம் நகைகளை கேட்டபோது அவற்றை தொலைந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், தணிகைவேலை கடத்தி சென்றதுடன் அவரது தந்தையை தொடர்புகொண்டு தங்களின் நகையோ அல்லது அதற்கு ஈடாக ஏழு லட்ச ரூபாய் பணத்தையோ கொடுத்துவிட்டு மகனை விடுவித்துகொள்ளும்படி எச்சரித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த தணிகைவேலின் தந்தை கலியமூர்த்தி, கடலூருக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் படி கூறிவிட்டு, காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்று கொள்ள வருகையில், தணிகைவேலை கடத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:சென்னை விமான நிலையத்தில் பயணியை கடத்திய ஆறு பேருக்கு சிறைBody:சிங்கப்பூரில் இருந்து
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்க்கு வந்த விமானத்தில் கடலூரை சேர்ந்த தனிகைவேல்(33) என்பவர் வந்தடைந்தார்.

தனிகைவேலிடம் சிங்கப்பூரில் வைத்து ஒரு நபர் 22 சவரன் நகை தந்து உள்ளார்.சென்னை விமான நிலையத்தில் ஒருவர் இருப்பார் அவரிடம் இந்த நகைகளை கொடுக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி உள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்த தனிகைவேலிடம் மர்ம கும்பல் ஒன்று சென்று தங்க நகைகள் எங்கே என்று கேட்டதற்கு என்னிடம் இல்லை என்றும் நகைகள் காணாமல் போனதாகவும் தணிகைவேல் கூறியுள்ளார்.

உடனே தனிகைவேலை
சென்னை விமான நிலையத்தில் இருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளனர்.

கடத்திய கும்பல் பின்னர் தணிகைவேலின் தந்தை கலியமூர்த்திக்கு போன் செய்து நாங்கள் தனிகைவேலை கடத்தியதாகவும் எங்களுக்கு கொடுக்க வேண்டிய தங்க நகைகளை அவர் தரவில்லை அதற்காக தான் நாங்கள் கடத்தி உள்ளோம், எங்களுக்கு தர வேண்டிய நகைகளை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அதற்கு பதிலாக ரூ. 7 லட்சம் பணத்தை தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

விரைவில் நகை அல்லது பணத்தை தரவில்லை என்றால் உங்கள் மகனை கொலை செய்து விடுவோம் ஈஎன்று மிரட்டியுள்ளனர்.

பயந்துபோன தனிகைவேலின் தந்தை கடலூருக்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனிகைவேலுடன் அந்த கும்பல் சென்னையில் இருந்து கடலூருக்கு சென்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கலியமூர்த்தி கடலூர் போலீசாருக்கு முன்பே தகவல் அளித்துள்ளார், இதனையடுத்து தனிகைவேலுடன் காரில் வந்த கும்பலை துப்பாக்கி முனையில் சினிமா பாணியில்
கடலூர் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தனிகைவேலை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டதால் இச்சம்பவம் பற்றி சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் தனிகைவேல் மற்றும் அவரை கடத்திய கடத்தல் கும்பலை அழைத்து வர சென்னை விமான நிலைய தனிப்படை போலீசார் கடலூருக்கு விரைந்து சென்று அவர்களை விமான நிலையம் அழைத்து வந்தனர்.

தனிகைவேலை கடத்தியவர்கள்
நாகூரை சேர்ந்த சாகுல் அமீது(27) நாகப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் அமீது(27)
முகமது இப்ராகிம் (29)
அப்துல் பாசித்(22)
பசூலூர் ரகுமான்(27)
கடலூரை சேர்ந்த திருமலை(45) ஆகிய 6 பேரையும் சென்னை விமான நிலைய நிலையத்திற்கு ரகசிய அறையில் வைத்து விசாரணை நடத்திய போது

குற்றவாளி சாகுல் அமீத்தின் வாக்குமூலம் சிங்கப்பூரில் கடந்த ஒரு வருடமாக வெல்டராக வேலை பார்த்து வந்த தணிகைவேல் சொந்த ஊருக்கு வர இருந்தபோது சிங்கப்பூரில் உள்ள எனது உறவினர் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தணிக்கை வேலிடம் தந்துள்ளார்.

இந்த நகையை சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதும் தணிகைவேலிடம் பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் என் உறவினர் கூறினார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்ததும் தணிகைவேலிடம் நகைகளை கேட்ட போது தொலைந்து
விட்டதாக தெரிவித்தார். நகைகளை வாங்கி கொண்டு தொலைந்து விட்டதாக நாடகமாடியதால் அவரது தந்தையிடம் நகையோ அல்லது ரூ. 7 லட்சம் பணத்தையோ தரவேண்டும் என்று கூறினோம் என்று சாகுல் அமீத் கூறியுள்ளார்.
எங்கள் நகைகளை தராமல் ஏமாற்றியதால் பணத்தை திருப்பி பெற நாங்கள் கடத்தியதாக தெரிவித்தார்.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 6
பேர் மீது வழக்கு பதிவு செய்து
ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.