ETV Bharat / city

'சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் செயற்பாட்டாளர்' - சீதாராம் யெச்சூரி - முதலமைச்சர்

முதுபெரும் தலைவர் சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் செயற்பாட்டாளராக இருந்துள்ளார் என சிபிஎம் அகில இந்தியச் செயலாளர் சீதாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சங்கரய்யா 100, சீதராம் யெச்சூரி, SITARAM YECHURI,
சங்கரய்யா 100
author img

By

Published : Jul 15, 2021, 4:05 PM IST

Updated : Jul 15, 2021, 4:57 PM IST

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா இன்று (ஜூலை.15) தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் குரோம்பேட்டை பகுதியில் உள்ள சங்கரய்யாவின் வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சிபிஎம் தலைமைக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் சங்கரய்யாவின் வீட்டிற்குச் சென்று கல்வெட்டு திறந்து கொடியேற்றி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

முதலமைச்சர் வாழ்த்து

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் தலைவரகளும் சங்கரய்யா வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது, "சங்கரய்யா பிறந்து 100 ஆண்டுகள் ஆகியுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் கடுமையாக செயலாற்றியுள்ளார்.

சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேட்டி

இன்றும் தொடர்கிற சேவை

சங்கரய்யா 1918-1920 ஸ்பானிஷ் ஃப்ளூ பொருந்தொற்று (SPANISH FLU PANDEMIC) பரவல் முடியும் காலத்தில் பிறந்து, தற்போது கரோனா பெருந்தொற்று காலத்திலும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு நூற்றாண்டின் பார்வையாளராக சங்கரய்யா இருக்கிறார். பார்வையாளராக மட்டுமின்றி ஒரு நூற்றாண்டு முழுவதும் செயற்பாட்டாளராக இருந்தார்.

சங்கரய்யா தமிழ்நாட்டில் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராகவும், மக்கள் சேவகராகவும் இருந்து வந்தார். அதனால்தான், அவரை அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்த தற்போது இங்கு வந்துள்ளனர்.

சமூக சீர்திருத்தக் கருத்துகளை தொடர்ந்து மக்களிடையே கொண்டு சேர்த்து வந்தார். அது தற்போது வரை தொடர்கிறது. அவர் 100 ஆண்டுகள் கடந்தும் வாழ வேண்டும். நாட்டை சீரழிக்கும் வகையில் சிலர் செய்படுகின்றனர். அவர்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Jul 15, 2021, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.