ETV Bharat / city

“ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

author img

By

Published : Jul 19, 2020, 1:43 PM IST

சென்னை: கரோனா தொற்று ஏற்பட்டால் பொதுமக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைவார்களோ, அதைவிட அதிகமாக மின்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

dmk_stalin_speech
dmk_stalin_speech

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை, உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை. கரோனா நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வரும் போது ஊரடங்கை தளர்த்தினார்கள். மதுக்கடைகளைத் திறந்தார்கள். பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை.

ஒருபக்கம் கரோனா வாட்டி வருகிறது என்றால், மற்றொரு பக்கம் முதலமைச்சர் பழனிசாமி மக்களை வாட்டி வதைக்கிறார். கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.

dmk_stalin_speech

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30ஆம் தேதிவரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். அரசு நிகழ்காலத்தில் செயல்பட வேண்டும். அரசின் அலட்சியப் போக்கால் இன்று பிற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி, ஊரடங்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும்தான் அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் புலம்புகிறார்கள். இதுதான் பெரும்பாலான குடும்பங்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், மக்களின் குரலை கோட்டைக்கு சொல்வதற்காகத்தான் ஜூலை 21ஆம் தேதி கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம்". இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.