சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக கு. செல்வப்பெருந்தகையும், துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும், ராஜேஷ்குமார் கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுயிலும் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளனர். அதிமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக என அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்துவிட்ட நிலையில் காங்கிரஸ் மிகத் தாமதமாகவே சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் நிர்வாகி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு: டி.எஸ்.பி.,யிடம் புகார்