ETV Bharat / city

'மாற்றம் என்று சொல்லி ஏமாற்றத்தை கொடுக்கிறார்கள்..!' - பாமகவை சாடிய சீமான் - சென்னை விமான நிலையம்

சென்னை: "மாற்றம் மாற்றம் என்று சொல்லி வருபவர்களெல்லாம் ஏமாற்றத்தைத்தான் கொடுக்கிறார்கள்" என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

man
author img

By

Published : Mar 17, 2019, 5:50 PM IST

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், “கூட்டணி வைத்தாலும் திட்டுவது, கூட்டணி வைக்காமல் தனியாக களமிறங்கினாலும் திட்டுவது, என இதனை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். மாற்று என்பது எப்படி? நான் இன்னொரு தலைமுறை பிள்ளைகளுக்கு நம்பிக்கையாக நின்றுவிட்டு போகிறேனே. கூட்டணி வைத்து வென்றவர்கள் சாதித்தது என்ன?

எல்லோரும் வருவது மாற்றம் மாற்றம் என்று சொல்வது, பிறகு அவர்களுடனே சேர்ந்து பெரிய ஏமாற்றத்தை கொடுப்பது. மாற்றம் என்று பேசுகிற தலைவர்கள், மாற்றத்தை பற்றி சிந்திக்கும் இளைஞர்கள், அரசியல் ஆய்வாளர்களிடம், தான் கேட்பது என்னவென்றால், எதில் இருந்து மாற்று, எப்படிப்பட்ட மாற்று, எந்த கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றத்தை கேட்கிறீர்கள்?

மாற்றம் என்று பேசிவிட்டு பின்னர் அவர்கள்கூடவே துணை நின்று அவர்களையே ஆட்சியமைக்க செய்வது என்பது எப்படி மாற்றமாக இருக்கும். அது பெரிய ஏமாற்றமாகத்தானே இருக்கும். அதை செய்ய நாங்கள் தயாராக இல்லை. அதனால் நாங்கள் தனித்துதான் போட்டியிடுகிறோம்” என்றார்.

Intro:Body:

Body

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.