ETV Bharat / city

கோயில்கள் இடிப்பு... பாரபட்சம் காட்டாதீங்க! - இந்து அறநிலையத் துறைக்கு கண்டனம்

author img

By

Published : Feb 8, 2022, 2:01 PM IST

அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக இந்து கோயில்களை மட்டும் இடிக்கப்படுவது தொடர்பான ஆதாரங்களுடன் விரிவான மனுவைத் தாக்கல்செய்ய இந்து முன்னணி நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அரசு பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அரசு ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக இந்து கோயில்களை மட்டும் இடிப்பதாகக் கூறி, இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 927 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகத் தமிழ்நாட்டு அரசு தாக்கல்செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து, 10 ஆயிரத்து 556 ஏக்கர் குடியிருப்புகளும், 1,500 ஏக்கர் வணிக நிறுவனங்களும், 30 ஆயிரத்து 24 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 1,311 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் இந்து கோயில்களை மட்டும் அரசு இடித்துவருகிறது. சமீபகாலத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரமாண்டுகள், நூற்றாண்டுகள் பழமையான கோயில்களும் இடிக்கப்படுகின்றன.

அதனால், அரசு நிலங்களில் உள்ள கோயில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தவோ அல்லது மாற்று இடங்களில் அமைக்கவோ உரிய திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்து கோயில்களை மட்டும் இடிக்கப்படுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்களை முறைப்படுத்தவும், மாற்று இடம் ஒதுக்கவும் திட்டம் வகுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திட்டத்தை வகுக்காமல் கோயில்களை இடிக்கத் தடைவிதிக்க வேண்டும்.

மேலும், இந்து கோயில்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவில் நீர்நிலைகள் பற்றி குறிப்பிடவில்லை. இந்து கோயில்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எந்த ஆதாரங்களும் இல்லை.

மேலும், இந்து கோயில்களுக்கு எதிராக மட்டும் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை மனுதாரர் தாக்கல்செய்ய வேண்டும். நீர்நிலைகளை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதில் எந்தப் பாரபட்சமும் காட்டக் கூடாது. குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரியவந்தால் அது அரசுக்குதான் சிக்கல்.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. 2003 முதல் 2022 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஆணையர் கடமை தவறுகிறார். இந்த விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரப் போக்குவரத்து தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.