ETV Bharat / city

நெருங்கும் திமுகவின் உட்கட்சி பொதுத்தேர்தல் - அக்டோபரில் இரண்டாவது பொதுக்குழு கூட வாய்ப்பு - திமுக பொதுக்குழு

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 19, 2022, 5:20 PM IST

சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்.19) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திமுகவின் 15ஆவது உட்கட்சி பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வரும் 22, 23, 24, 25ஆகிய தேதிகளில், உட்கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிட இருப்பவர்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கட்சியின் நிர்வாக வசதிக்காக மறுசீரமைக்கப்பட்ட 72 மாவட்டங்களில் அவைத் தலைவர், மாவட்டச் செயலாளர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியப் பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த உட்கட்சி தொடர்பான இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புசெயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் நகரம், மாநகரங்களுக்கான பகுதிக்கான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட அமைப்பு தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25ஆம் தேதியோடு மாவட்ட அமைப்புக்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வ.எண்மனு தாக்கல் தேதிமனுதாக்கல் செய்யவேண்டிய மாவட்டங்கள்
செப்.22 கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை
2. செப்.23நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி
3. செப்.24புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
4. செப்.25வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

இதையும் படிங்க: சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர் - திருமாவளவன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.