ETV Bharat / city

புத்தக காட்சியில்  'விஞ்ஞான் பிரச்சார்' புத்தகங்கள் - Chennai news

சென்னை: மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக இயங்கும், "விஞ்ஞான் பிரச்சார்" அமைப்பு வெளியிடும் எளிய அறிவியல் புத்தகம் தற்போது சென்னை புத்தக காட்சியில் கிடைக்கின்றன. இந்தப் புத்தகத்தில் தமிழ்நாட்டில் அரியலூரில் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர்களின் வாழ்க்கை பற்றிய ஏராளமான தகவல்கள் அழகிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

புத்தகங்கள்
புத்தகங்கள்
author img

By

Published : Mar 5, 2021, 8:26 PM IST

Updated : Aug 9, 2022, 7:23 PM IST

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக இயங்கும், "விஞ்ஞான் பிரச்சார்" எளிய ஆங்கில மொழியில் ஏராளமான அறிவியல் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

சென்னை 44ஆவது புத்தகக் காட்சியில் அரங்கு எண் 185இல் இந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன. "விஞ்ஞான் பிரச்சார்" தமிழ் பிரிவான அறிவியல் பலகையின் சார்பில் "ட்ரூடான்" தமிழ்ப் புத்தகம் இந்தப் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகத்தில் தமிழ்நாட்டில் அரியலூரில் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர்களின் வாழ்க்கை பற்றிய ஏராளமான தகவல்கள் அழகிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்துபார்க்கும் விதத்தில் பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இது அறிவியல் மீது ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், அறிவியலை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், அறிவியல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அரங்கில் மாணவர்களும், பெரியவர்களும் அதிக அளவில் குவிந்து புத்தகங்களையும், எளிய அறிவியல் பரிசோதனை கருவிகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

இந்தப் புத்தகக் காட்சியில் நிச்சயமாக நீங்களும் சென்று பார்த்து பயனடைய வேண்டிய ஒரு அரங்காக இது இருக்கிறது.

Last Updated : Aug 9, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.