ETV Bharat / city

நவம்பரில் பள்ளிகள் திறப்பு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி; ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளன.

நவம்பரில் பள்ளிகள் திறப்பு
நவம்பரில் பள்ளிகள் திறப்பு
author img

By

Published : Oct 9, 2021, 3:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி; ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களுக்கும் மேல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன.

இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கல்வியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். மேலும், மாணவர்களின் கற்றல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் முடிவுகளில் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் 9, 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பள்ளிகளின் தூய்மை

அதனைத் தொடர்ந்து 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையலறை, கழிவறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறையிலுள்ள தளவாட பொருள்கள், கதவு, ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர்

பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாமலும், மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டியின் உள்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் இருப்பதை உறுதி செயதிட வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப போதுமான அளவில் முகக்கவசம் இருக்க வேண்டும்.

பள்ளிகள் திறக்க தயார்

ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான அளவில் சானிடைசரை கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலிலும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யத் தேவையான வசதிகள் இருக்க வேண்டும்.

கரோனா தடுப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களின் தூய்மை முதலியவற்றை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்த அறிக்கையை அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரம் குருஞானசம்பந்தர் பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.