சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்துதான் முழுமையாக நேரடி முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் வரும் 30-ம் தேதி முடிவடைகிறது.
இந்த நிலையில் 2022-23ஆம் கல்வி ஆண்டில், பள்ளிகள் திறப்பு, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளின் விவரம், 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை உட்பட அனைத்து விவரங்களையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிடுகிறார். மேலும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் தேதி விவரங்களும் அறிவிக்கப்படவுள்ளன.