ETV Bharat / city

பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி - ஆய்வுக்கு உத்தரவு!

சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுவதை கல்வித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

class
class
author img

By

Published : Dec 27, 2019, 1:47 PM IST

Updated : Dec 27, 2019, 2:25 PM IST

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி, கல்வித் துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

  • வட்டாரக் கல்வி அலுவலர்கள் முன் அறிவிப்பு இல்லாமல் பள்ளிகளுக்குச் சென்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
  • ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை முன் அறிவிப்பு இல்லாமல் பார்வையிடுவதுடன் 5 பள்ளிகளை ஆண்டாய்வு செய்ய வேண்டும்.
  • அவ்வாறு ஆய்வு செய்யும்போது குறைந்தது இரண்டு மணி நேரம் அங்கு இருத்தல் வேண்டும்.
  • அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன், மாணவர்கள் வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்.
  • தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, மடிக்கணினி, ஆங்கில அகராதி பயன்பாடு, அறிவியல் மற்றும் கணக்கு உபகரணப்பெட்டி உள்ளிட்டவற்றின் பயன்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
  • மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க ஆங்கிலப் பயிற்சி புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதைக்கொண்டு வாரம் ஒரு முறை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    அரசுப் பள்ளி மாணவர்கள்
    அரசுப் பள்ளி மாணவர்கள்
  • நடுநிலைப் பள்ளி வளாகங்களிலுள்ள அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
  • மாதம்தோறும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தை நடத்தி, நீண்ட நாட்களாகப் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கண்டறிந்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரத்தை பள்ளியிலுள்ள பதிவேடு விவரத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
  • மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சிகள் காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னர் 15 நிமிடங்களும், மாலையில் 45 நிமிடங்களும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். யோகா மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் பள்ளியில் நடைபெறுவதை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளும் இப்பணியினை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து மாதம்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'விவசாயம் தொழில் அல்ல... வாழ்வியல்' - விளக்கும் மாணவர்கள்

Intro:பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதை ஆய்வு செய்ய உத்தரவு

Body:சென்னை,

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படுவதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி கல்வித்துறை அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வட்டார கல்வி அலுவலர்கள் முன் அறிவிப்பு இல்லாமல் பள்ளிகளுக்கு காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதேபோல் ஒரு பள்ளியினை பார்வையிடும்போது குறைந்தது இரண்டு மணி நேரம் பள்ளியில் இருத்தல் வேண்டும்.

வட்டார கல்வி அலுவலர் ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை முன் அறிவிப்பு இல்லாமல் பார்வையிடுவதுடன், 5 பள்ளிகளை ஆண்டாய்வு செய்ய வேண்டும்.

பள்ளியின் ஆய்வு செய்யும்போது அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவு திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன், மாணவர்கள் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.

யோகா மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் பள்ளியில் நடைபெறுவதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளியில் உள்ள தொலைக்காட்சி பெட்டி, கம்ப்யூட்டர், லேப்டாப், ஆங்கில அகராதி பயன்பாடு, அறிவியல் மற்றும் கணக்கு உபகரணப்பெட்டி உள்ளிட்டவற்றின் பயன்பாடுகளைப் ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை அதிகரிக்க ஆங்கிலப் பயிற்சி புத்தகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தப் பேச்சு பயிற்சி புத்தகங்களை கொண்டு வாரம் ஒரு முறை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் கல்விச் செயல்பாடுகள் ஆய்வு செய்ய வேண்டும்.

மாதம்தோறும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தை நடத்தி ,நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விபரத்தை பள்ளியில் உள்ள பதிவேடு விபரத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் தினமும் உடல் சார்ந்த பயிற்சிகள் காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னர் 15 நிமிடங்களும், மாலையில் 45 நிமிடங்களும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து உதவி பெறும் தொடக்க ,நடுநிலை பள்ளிகளும்,சுயநிதி தொடக்க, நடுநிலை மற்றும் நர்சரி ,பிரைமரி பள்ளிகளில் தொடக்க அனுமதியும் தொடர் அங்கீகாரமும் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட பணியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து மாதம்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Conclusion:
Last Updated : Dec 27, 2019, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.