பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2019- 20ஆம் கல்வி ஆண்டிற்கான இசை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்து கலந்தாய்வில் மாறுதல் ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து 2012 -13ஆம் ஆண்டு முதல் 2015 -16ஆம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டுகளில் இசை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.
வாட்ஸ்அப் பயனர்களைக் குறிவைக்கும் இஸ்ரேல் ஹேக்கர்கள்!
அந்த இடங்கள் போட்டித் தேர்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 75 இசை ஆசிரியர்களைத் தேர்வு செய்து அளித்துள்ளது. அவர்களுக்கு நவம்பர் 2ஆம் தேதி இணையம் வழியாகக் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
மேலும் விபரங்களைக் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்த விபரங்களைத் தேர்வு செய்யப்பட்ட இசை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.