ETV Bharat / city

ஒமைக்ரான் பரவல்: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

ஒமைக்ரான் தொற்று அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Nov 29, 2021, 7:52 PM IST

Updated : Nov 29, 2021, 9:13 PM IST

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். உலக சுகாதார அமைப்பு உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸான ஒமைக்ரான், மற்ற வேரியண்டுகளைவிட அதிக ஆபத்து கொண்டது என்று அறிவித்துள்ளது.

அத்துடன் இந்தத் தொற்று பரவினால் உயிரிழப்பு முன்பைவிட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த சூழலில் ஒமைக்ரான் தொற்று அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால், அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்த‌ல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் தவறானது. தொற்று பரவலால் விடுமுறை அளிக்கும் சூழல் ஏற்பட்டால் அரசு அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய வகை கரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்

Last Updated : Nov 29, 2021, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.