சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவரும் விகே சசிகலா ஜன.27ஆம் தேதி விடுதலையாகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்டவர் விகே சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நான்காண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவருகிறார்.
இவரின் தண்டனைக் காலம் ஜன.27ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம் விகே சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிறார். இதனை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில், “நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2021நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2021
சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ள நிலையில் சசிகலாவுக்கு கடந்த 20ஆம் தேதி கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். ஐசியூ வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சசிகலா சாதாரண வார்டுக்கு மாற்றம்!