சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் காயத்ரி நகரை சேர்ந்தவர் பாபு(65). பொதுப்பணித்துறை அதிகாரியான இவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். பாபு செம்பாக்கத்தில் உள்ள வங்கியில் இருந்து ரூ.80 ஆயிரம் பணம் எடுத்து தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைத்துக் கொண்டு, மகாலட்சுமி நகரில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு சென்று, தனது இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்தி விட்டு, மருந்து வாங்க கடைக்குச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, சேலையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் பணத்தைத் திருடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
அந்த சிசிடிவி காட்சிகளில், இரண்டு இருசக்கர வாகனத்தில் பாபுவைப் பின்தொடர்ந்து வரும் நான்கு பேர், அவரது இருசக்கர வாகனத்தில் உள்ள பணத்தைக் கொள்ளையடிப்பது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளி்ன் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பெங்களூரு ஏடிஎம் தாக்குதல் குற்றவாளிக்கு 12 ஆண்டு சிறை