ETV Bharat / city

வடிவேலு பாணியில் டெஸ்ட் டிரவ் என 8 லட்சம் ரூபாய் ஜீப்புடன் எஸ்கேப்பான ஆசாமி - திருமங்கலம் காவல் நிலையம்

சென்னையில் வடிவேலு பாணியில் டெஸ்ட் டிரவ் என்று 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜீப்புடன் எஸ்கேப்பான ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

வடிவேலு பட பாணியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜீப் திருட்டு

author img

By

Published : Aug 13, 2022, 6:01 PM IST

சென்னை: நடிகர் வடிவேலுவின் ஒரு திரைப்படத்தில் இருசக்கர வாகனத்தை விலை குறைத்து பேச வருமாறு அழைத்துச் செல்வார்கள். வண்டியை டெஸ்ட் டிரவ் பார்த்துவிட்டு தொகையை கொடுத்துக் கொள்ளலாம் என்று வடிவேலு கூறுவார். இதையடுத்து டெஸ்ட் டிரவ் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்துடன் சென்ற இருவரும் எஸ்கேப்பாகி விடுவர். இது பார்க்க நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் வண்டியை இழந்தவருக்கு மட்டுமே அந்த வேதனை தெரியும்.

இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நிகழந்துள்ளது. சென்னை பாடி மேம்பாலம் அருகே சாய் கார் செலக்சன் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஷோரூம் உள்ளது. இதன் உரிமையாளர் சௌந்தரபாண்டியன் ஆவார்.

இந்த ஷோரூமில் ஹோண்டா சிட்டி, ஷிப்ட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாடல்களில் பயன்படுத்தப்பட்ட கார்கள் உள்ளன. இந்த ஷோரூம்க்கு நேற்று மாலை முருகன் என்பவர் தான் வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு வந்தார். அதோடு உடனடியாக தனக்கு ஹோண்டா சிட்டி கார் வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் காரை டெஸ்ட் டிரைவ் எடுத்து சிறிது தூரம் ஓட்டி இருக்கிறார். அப்போது கார் ஷோருமின் ஊழியர் தனீஷ் என்பவர் உடன் இருந்திருக்கிறார். பின்னர் ஷோரூக்கு காருடன் திரும்பி இருக்கிறார். அப்போது 90-களில் வெளிவந்த ஜீப்பை ஒன்று மறு வடிவம் செய்து விற்பனைக்காக வைத்திருப்பதை காண்கிறார். இதனை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என்று கூறி எடுத்துச் சென்றார். அவருடன் கார் ஷோரூம் ஊழியர் தனீஷ் சென்றார்.

அப்போது முருகன் தனியார் திருமண மண்டபத்துக்கு சென்று காரை நிறுத்தினார். இதையடுத்து மண்பட மேனேஜர் எனது உறவினர் பேசிவிட்டு வருகிறேன் என்று தனீஷிடம் கூறி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மண்டபத்தில் உள்ளே போய் மேனேஜரை சந்தித்தி புக் செய்வதை போல் பேசியிருக்கிறார். இதையடுத்து மீண்டும் காருக்கு திரும்பி தனீஷிடம் மேனேஜரை கைக்காட்டி அவரிடம் கார் குறித்து விளக்குமாறு தெரிவித்துள்ளார். இதை நம்பி தனீஷ் சென்ற கேப்பில் முருகன் காருடன் எஸ்கேப்பானார். சிறிது நேரத்தில் கார் திருடப்பட்டதை உணர்ந்த தனீஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கொள்ளையடித்த பட்டதாரி காதல் ஜோடி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.