சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மருத்துவக்கல்வி, பி.இ, பிடெக். வரை ரூபாய் ஆயிரம் முதல் ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி, 2021-22ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை http://www.chennai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை – 600006 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதேபோல, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சார்பில் வழங்கப்படும் ரூ.7000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கு scholorship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிய அலுவலருக்கு குவியும் பாராட்டு!