சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரபல ரவுடி நாராயணனை நேற்று (ஜன.29) பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாராயணனின் உடலை காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி, உதவி ஆணையர் தினகரன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், புதுவண்ணாரப்பேட்டை பல்லம் பகுதியைச் சேர்ந்த ஏல்லப்பன்(24), எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சரவணன்(22), தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த சரவணன்(22) ஆகியோர் ரவுடி நாராயணனை கொலை செய்தது தெரிய வந்ததது. இதனையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் சாலையில் சுற்றிய பிரபல ரவுடி!