சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அச்சத்தை போக்கும் வகையில், திருப்புதல் தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக, கடந்த 1 ஆண்டு 6 மாதத்திற்கும் மேல் பள்ளிகள் செயல்படாமல் இருந்தது. கரோனா தொற்று குறைந்தால் நடப்புக் கல்வியாண்டிற்கான வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த 2 ஆண்டாக மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதாமல் வந்துள்ளதால், அவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் எனவும், அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2021-2022ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் அடைவுத்திறனை சோதிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
தேர்வு அட்டவணைகள்:
முதல் திருப்புதல் தேர்வு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறுகிறது.
ஜனவரி 19ஆம் தேதி மொழித்தாள்
ஜனவரி 20ஆம் தேதி ஆங்கிலம்
ஜனவரி 21ஆம் தேதி தொடர்பு ஆங்கிலம்
இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர்வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
ஜனவரி 24ஆம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள், டெக்ஸ்டைல் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி)
ஜனவரி 25ஆம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்
ஜனவரி 27ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்,
அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,
அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்,
அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஜவுளி தொழில்நுட்பம்,
அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
ஜனவரி 28ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் ஜனவரி 19ஆம் தேதி 27ஆம் தேதி வரையில் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது.
ஜனவரி 19ஆம் தேதி மாெழிப்பாடம் (தமிழ்)
ஜனவரி 20ஆம் தேதி ஆங்கிலம்
ஜனவரி 21ஆம் தேதி விருப்பப்பாடம்
ஜனவரி 24ஆம் தேதி கணக்கு
ஜனவரி 25ஆம் தேதி அறிவியல்
ஜனவரி 27ஆம் தேதி சமூக அறிவியல்
12ஆம் வகுப்பு 2ஆவது திருப்புதல் தேர்வு
அதேபோல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2ஆவது திருப்புதல் தேர்வு மார்ச் 21ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறுகிறது.
மார்ச் 21ஆம் தேதி மொழித்தாள்
மார்ச் 22ஆம் தேதி ஆங்கிலம்
மார்ச் 23ஆம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர்வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
மார்ச் 24ஆம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள், டெக்ஸ்டைல் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி)
மார்ச் 25 ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்,
அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,
அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்,
அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஜவுளி தொழில்நுட்பம்,
அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
மார்ச் 28ஆம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்
மார்ச் 29ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
10ஆம் வகுப்பு 2ஆவது திருப்புதல் தேர்வு
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையில் 2ஆவது திருப்புதல் தேர்வு நடைபெறும்
அதன்படி,
மார்ச் 21ஆம் தேதி தமிழ்
மார்ச் 22ஆம் தேதி ஆங்கிலம்
மார்ச் 23ஆம் தேதி கணக்கு
மார்ச் 24ஆம் தேதி அறிவியல்
மார்ச் 25ஆம் தேதி சமூக அறிவியல்
மார்ச் 26ஆம் தேதி விருப்பப்பாடம் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க:Omicron spreads:புதுச்சேரியில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடையா?