சென்னை: ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஞான ராஜசேகரன் எழுதிய “இந்திய ஆட்சிப் பணியும், சினிமாவும் மற்றும் நானும்” என்னும் புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப்.7) வெளிட்டார். இதனை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நடிகர் சிவகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஞான ராஜசேகரன், "கேரளாவில் இந்திய ஆட்சிப் பணி அலுவலராக பணியாற்றிய அனுபவங்கள், திரைப்பட தணிக்கை துறையில் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து ''இந்திய ஆட்சி பணியும் சினிமாவும் நானும்'' எனும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினேன். இந்த புத்தகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையில் வெளியிடப்பட்டது. இந்த நூலை சென்னை டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பணி நேரத்தில் செல்போனுக்குத் தடை: பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை