சென்னை தியாகராய நகர் நாகேஸ்வரராவ் சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு தையல் கடைகள், பண பரிவர்த்தனை மையங்கள் உள்ளிட்டவை செயல்பட்டுவருகின்றன. இங்கு ஜூலை 20ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் 8 கடைகளில் பூட்டை உடைத்துள்ளனர்.
ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் நலிவடைந்துள்ள நிலையில் வெறும் 250 ரூபாய் மட்டும் இருந்ததை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.
இது தொடர்பாக மாம்பலம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வணிக வளாகம் இரு பங்குதாரர்களுக்கு உரியது என்பதால் சொத்து தகராறு உள்ளதாகவும் தெரிகிறது. எனவே கடைகளை காலி செய்ய வைக்க இப்படி ஒரு நாடகம் நடத்தப்பட்டதா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வணிக வளாகத்தில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்
சென்னை: தியாகராய நகரில் 8 கடைகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.