ETV Bharat / city

ஆம்னி பேருந்து கட்டண விவரம் அறியும் இணையதளம் முடக்கம்..காரணம் என்ன..?

ஆம்னி பேருந்து கட்டண விவரம் வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் இணையதளம் முடங்கியுள்ளது.

author img

By

Published : Sep 23, 2022, 9:22 AM IST

ஆம்னி பேருந்து கட்டண விவரம் அறியும் இணையதளம் முடக்கம்..காரணம் என்ன..?
ஆம்னி பேருந்து கட்டண விவரம் அறியும் இணையதளம் முடக்கம்..காரணம் என்ன..?

சென்னை: தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அந்த விவரங்களை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இணையதளத்தில் வெளியிட்டது.

ஆம்னி பேருந்து கட்டண விவரம் வெளியாகிய 24 மணி நேரத்திற்குள் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்து கட்டண விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டணத் தொகையை பார்ப்பதற்கான தங்களது வலைதள முகவரி முடங்கி இருப்பதாகவும், விரைவில் சரி செய்யப்படும் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒரு சில நேரங்களில் விமான கட்டணங்களை போல் ஆம்னி பேருந்து கட்டணம் இருப்பதால் முன்பதிவு செய்யாமல் வாடிக்கையாளர்கள் அரசு பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் குறைந்த பயணிகள் மட்டுமே பயணிப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நியாயமான கட்டணங்களை வசூலித்தால் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லலாம் எனவும் அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: 'பதிவுத்துறை வருவாய் ரூ. 8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது' - அமைச்சர் பி. மூர்த்தி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.