சென்னை: பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியம் சங்கத்தினர் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்கிடக்கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் இந்திராணி, செயலாளர் சொர்ணம் ஆகியோர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.