ETV Bharat / city

'கரோனாவைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை' - ராமதாஸ் அறிக்கை - Ramadoss statement -

கரோனாவைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை என்றும், பொதுமக்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை
கரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை
author img

By

Published : Apr 7, 2021, 2:04 PM IST

இது தொடர்பாக அவர் வெளியட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, எவரும் நினைத்துப் பார்த்திராத வகையில் உயர்ந்திருக்கிறது. கரோனா பரவலின் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தப்படுத்த வேண்டியதும், அத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதும் அவசியமாகும்.

கரோனா பரவல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைக் கூட கடைபிடிக்காதது தான் இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு காரணம் ஆகும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பேருந்துகள், தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட எவரும் முகக் கவசம் அணியாதது தான் கரோனா பரவல் வேகம் அதிகரித்ததற்கு காரணம் ஆகும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைகளும் கரோனா பரவலுக்கு காரணமாக அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.

கரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டின் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுதான் அரசின் முதற்கடமையாக இருக்க வேண்டும். ஒருபுறம் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி, மறுபுறம் கரோனா பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைபிடிப்பதன் மூலம் நோய்ப்பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்ற இருமுனை அணுகுமுறையை தமிழ்நாடு அரசு கடைபிடித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலமாக மட்டுமே கரோனா வைரஸ் பரவல் வேகத்தை முழுமையாக குறைத்து நோயை முற்றிலுமாக போக்க முடியும்.

தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு அரசு கூறிவிட்டது. அதற்கு மாற்றாக தேவையற்ற விஷயங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதற்குப் பிறகும் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடமாடுபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அபராதம் விதிப்பதோ, பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதோ தண்டிப்பதற்காக அல்ல.... கரோனா என்ற உயிர்க்கொல்லி நோயிலிருந்து தங்களையும் காப்பாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காகத் தான் என்பதை பொது மக்கள் உணர வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.