சென்னை: நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
தமிழ்நாட்டில் வரும் நாள்களில் மழையின் அளவு குறையும் - வானிலை ஆய்வு மையம் - தமிழ்நாடு வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் வரும் நாள்களில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்
சென்னை: நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
அதேபோல் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ஆறு இடங்களில் மிக கனமழையும், 43 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
இதன் காரணமாக 1ஆம் தேதிவரை தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பு அளவு 35 செ.மீ., ஆனால் 63 செ.மீ. மழைப் பொழிவு கிடைத்துள்ளது.
இது இயல்பைவிட 80 விழுக்காடு கூடுதல், அதேபோல் 60 செ.மீ. கிடைக்க வேண்டிய இடத்தில்,113 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், இது இயல்பைவிட 83 விழுக்காடு அதிகம். இந்தாண்டு நவம்பர் மாதத்தில் சென்னையில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது" எனத் தெரிவித்தார்.