அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர், அகமது படேல் நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவையொட்டி, இன்று காலை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கபட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி சுப்பிரமணியம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாவட்ட வட்டார தலைவர், சேவாதளம் இளைஞர் மகிளா மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ராகுல் காந்தி அஞ்சலி!