ETV Bharat / city

பாஜக அரசு போல பழிவாங்கும் அதிமுக அரசு: சாடும் நாராயணசாமி

சென்னை: பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக அரசுதான் செய்யும் எனவும், அதைத் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிப்பதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார்.

cm
cm
author img

By

Published : Jan 13, 2020, 1:19 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியதற்கு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் நடந்துவருகிறது. கேரளா, மேற்குவங்க முதலமைச்சர்கள் இச்சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை புதுச்சேரி மாநிலத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அரசைக் கலைத்தாலும் அதைப்பற்றி கவலையில்லை.

இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து இந்திய நாட்டை மத்திய பாஜக அரசு துண்டாடப் பார்க்கிறது. டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியது கொடுமையான, கண்டிக்கத்தக்க செயல்.

மோடி அரசு போல எடப்பாடி அரசும் பழிவாங்குகிறது

கண்காட்சியில் புத்தகங்கள் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. விமர்சனங்கள் வந்தால் ஆட்சியில் இருப்பவர்கள் அதைச் சரிசெய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து புத்தகம் வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைதுசெய்யக் கூடாது. பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக அரசுதான் செய்யும். அதைத் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர் அன்பழகன் கைது - புத்தகக் கண்காட்சி நிர்வாகத்தால் நேர்ந்த அவலம்

Intro:சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி
Body:சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியதற்கு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் போராட்டம் வெடித்து உள்ளது. 3 நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களை தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதிற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. டெல்லி ஜே.என்.யு. மாணவர்களை தாக்கியது கொடுமையான செயல்.

வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கேரளா, மேற்கு வங்காள முதலமைச்சர் ஆகியோர் கொண்டு வர முடியாது என்று கூறிவிட்டனர்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவெடு ஆகியவற்றை புதுச்சேரி மாநிலத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம். மதத்தின் பெயரால் மக்களை பிரித்து இந்திய நாட்டை மத்திய பா.ஜ.க. அரசு துண்டாட பார்க்கிறது. புதுச்சேரி அரசை மத்திய அரசு கலைத்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம்.

புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் அங்கீகரிக்கப்பட்டு வெளியிட்டப்பட்டு வருகிறது. விமர்சனங்கள் வந்தால் ஆட்சியில் இருப்பவர்கள் சரி செய்ய வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய மோடி அரசு தான் செய்யும். அதை தமிழக அரசும் கைப்பிடிக்கிறது. விமர்சனத்தை புரிந்து சரி செய்ய வேண்டும். அதைவிட்டு ஜனநாயக நாட்டிற்கு ஏற்றத்தல்ல.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.