ஒவ்வொரு ஆண்டும் மத்திய வருமானவரித் துறையால் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் முன்பு விழிப்புணர்வு பதாகைகளுடன், வருமான வரித் துறை அலுவலர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது பேட்டியளித்த வருமானவரித் துறை விழிப்புணர்வு கூடுதல் இயக்குநர் ரத்தினசாமி, “நேர்மை - ஒரு வாழ்க்கை முறை" என்ற வாக்கியத்தை இந்த ஆண்டின் விழிப்புணர்வு வாரக் கருப்பொருளாக, ஆணைக்குழுவால் தேர்வு செய்யப்பட்டது. ஒருமைப்பாடும், நெறிமுறைகளும் தேசத்தின் அடிப்படை தூண்களாக உருவாகின்றன.
ஊழலை எதிர்ப்பது என்பது சட்டங்களை உருவாக்குவதும், நிறுவனங்களை உருவாக்குவதும் மட்டும் அனைத்தையும் சரிசெய்து விடாது. மனித விழுமியங்களையும், தனி மனித ஒழுக்க நெறிகளையும் ஆழமாக உள்வாங்குவதே சிறந்ததாக இருக்கும். அதுவே பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.