ETV Bharat / city

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிப்.19 பொதுவிடுமுறை - சென்னை மாநகராட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்.19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Public holiday on February 19 2022 in tamilnadu

author img

By

Published : Feb 10, 2022, 2:56 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்த தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிப்.19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.