ETV Bharat / city

'மாணவர்களை பற்றி கவலைப்படாமல் ரஜினி பேச்சு தேவையா?' - பிரபல மனநல மருத்துவர் வேதனை - Rajini psychiatrist rudran

அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் நலன் பற்றி கவலைப்படாமல் வெட்டியாக ரஜினி பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் தருவது மனவேதனை தருவதாக மனநல மருத்துவர் ருத்ரன் பதிவிட்டுள்ளார்.

Rudran
Rudran
author img

By

Published : Jan 23, 2020, 2:44 PM IST

ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பெரியார் குறித்து ரஜினியின் பேச்சு ஆகியவை குறித்து மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது, விவாதத்தை கிளப்பியுள்ளது. மிக சிறுவயதிலேயே மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தவறான அணுகுமுறை எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர்.

அதேபோல், சேலத்தில் 1971ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் திராவிடக் கழகத்தினர் நடத்திய ஊர்வலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து குறித்தும் பல்வேறு அரசியல் தரப்பிலும் விவாதிக்கப்பட்டுவருகிறது.

பிரபல மனநல மருத்துவரான ருத்ரன் இந்த இரு நிகழ்வுகள் குறித்து முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அடுத்த தலைமுறையினரின் கல்வி ஒரு பெரும் சிக்கலில் இருக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எத்தனை குழந்தைகளையும், அவர்களின் பெற்றோர்களையும் பாதிக்கப்போகிறது என்பது, கடந்த மூன்று நாள்களில் ஏழு தாய்மார்கள் தங்கள் குழந்தை ஐந்தாம் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை என்று என்னிடம் அழைத்து வந்ததில் தெரிகிறது.

ருத்ரன் முகநூல் பதிவு
ருத்ரன் முகநூல் பதிவு
இதை எதிர்த்து எல்லாரும் திரளாமல், வெட்டியாக ரஜினி பேச்சு பற்றியே பேசுவதைப் பார்த்தால் வேதனை வருவதோடு, அருவெறுப்புடன் கூடிய கோபமும்தான் வருகிறது. நாம் எவ்வளவு நீர்த்துப் போயிருக்கிறோம்” என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

psychiatrist rudran on Public Exam and Rajini

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.