ETV Bharat / city

விழுப்புரம் மாவட்ட த.மு.மு.க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

author img

By

Published : Mar 30, 2022, 10:08 AM IST

விழுப்புரம் மாவட்டச் த.மு.மு.க செயலாளரை தாக்கிய மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாப்பூரில் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் தமுமுக தலைவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

சென்னை: மயிலாப்பூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது தமுமுக மாவட்டத் தலைவர் முஸ்தாக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர், 'எங்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போன்று அழைத்து வீட்டில் வைத்து தாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல் நிலையத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முஸ்தாக்கை காவல் துறை இன்னும் கைது செய்யவில்லை.

இதனால் காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு துணை போவதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், காவல் துறையினருக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: 'மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு பாராட்டு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.