சென்னை :கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.
நிதியமைச்சர் அளித்துள்ள தகவல்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- 2013-14 ஆம் ஆண்டுக்கு பின்பு தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது.
- கரோனா தொற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டின் நிதிநிலை மேலும் வீழ்ச்சியை சந்தித்தது.
- பெரும் நெருக்கடியில் உள்ள நிதி நிலைக்கு வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, அதனால் தொடர்ந்து அதிகரித்துள்ள கடன் சுமையை ஆகியவை காரணிகளாக அமைந்துள்ளன.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை.
- 2020-2021ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி ரூபாயாக உள்ளது. இது வழக்கமாக அனுமதிக்கப்படும் நிதிப்பற்றாக்குறையை காட்டிலும் அதிகமாகும்.
- 2012 முதல் 2013ஆம் ஆண்டு வரை மாநில அரசின் ஒட்டுமொத்த கடனும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. தற்போது 14வது நிதி குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காடு எட்டியுள்ளது.
- 2021 முதல் 2022ல் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் 5 கோடியே 70 லட்சத்து 189 கோடி ரூபாயாக இருக்கும்.
- 2003 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் ஒவ்வொரு மாநிலமும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொது கடனின்களின் விகிதத்தை குறைத்துள்ளது.
- கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வாகன வரி மாற்றப்படவே இல்லை.
- சரியான நேரத்தில் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழ்நாடு அரசுக்கு 2,577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறையின் கடன் மோசமான சூழ்நிலையில் உள்ளது. மின்வாரியம், போக்குவரத்து கழகங்கள் மீது 2 லட்சம் கோடிக்கு அதிகமாக கடன் உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஒரு கிலோமீட்டருக்கு பேருந்து ஓடினால் ரூ.59.57 நஷ்டம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பிடிஆர் பெயரில் போலி மின்னஞ்சல்: 7 பிரிவுகளின் கீழ் வழக்கு