ETV Bharat / city

பேரியம் கலந்த பட்டாசுகள் வெடிக்க தடை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடிகளை தயாரிக்க, விற்க, வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

பேரியம் கலந்த பட்டாசுகள் வெடிக்க தடை
பேரியம் கலந்த பட்டாசுகள் வெடிக்க தடை
author img

By

Published : Oct 30, 2021, 8:15 PM IST

சென்னை: பேரியம் கலந்த பட்டாசுகள், சரவெடிகளை தயாரித்தாலோ, விற்றாலோ, வெடித்தாலோ குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "உச்சநீதிமன்றம் நேற்று (அக்.29) வெளியிட்ட தீர்ப்பில் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தியும், எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்னபிற நிகழ்வுகளின் போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும்,

ஆனால் பொதுமக்களின் உடல் நலன், சூற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

ரசாயனம் கலந்த பட்டாசுகளுக்கு தடை

மேற்படி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சரவெடி உள்பட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகைக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.