சென்னை: அண்ணாநகர் 2ஆவது மெயின் ரோடு ஆர்யா அபார்ட்மெண்ட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜசேகர் (30). இவர் ஆருத்ரா கோல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர் ஆக உள்ளார்.
மேலும் ராஜசேகருக்குச் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 10 நிறுவனங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள நிறுவனத்தில் ஹரிஷ் என்பவர் மேனேஜராக உள்ளார்.
இந்த நிலையில் இன்று (டிச.05) அதிகாலை 3 மணிக்கு ஹரிஸ் மற்றும் அவருடன் பத்து நபர்கள் ராஜசேகர் வீட்டிற்குச் சென்று ராஜசேகரிடம் பேசிவிட்டு அனுப்புவதாகக் கூறி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த ராஜசேகர் காவல்துறை எண் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரோந்து வாகனம் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்வேல் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தார்.
மேலும் இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவரின், குடும்பத்தார் யாரும் இதுவரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் ஆசிரியர் பணியிடை நீக்கம் - தவறான முடிவு என சங்கங்கள் கண்டனம்